Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ சம்பியன்களான ஜுவென்டஸுக்கும், விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா சம்பியன்களான லேஸியோவுக்குமிடையிலான இத்தாலிய சுப்பர் கிண்ணப் போட்டியில் லேஸியோவிடம் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் தோற்றது.
சவுதி அரேபியாவில் நேற்றிரவு நடைபெற்ற குறித்த போட்டியின் 17ஆவது நிமிடத்தில், சக மத்தியகளவீரர் சேர்ஜி மிலின்கோவிச்-சவிச்சிடமிருந்து பெற்ற பந்தை லேஸியோவின் இன்னொரு மத்தியகளவீரரான லூயிஸ் அல்பேர்ட்டோ கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.
இந்நிலையில், போட்டியின் முதற்பாதியின் முடிவில் ஜுவென்டஸின் நட்சத்திர முன்களவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை லேஸியோவின் கோல் காப்பாளர் தோமஸ் ஸ்ரகோஷா தடுத்து மீண்டும் வந்திருந்த நிலையில் அவ்வணியின் இன்னொரு முன்களவீரரான போலோ டிபாலா அதைக் கோலாக்க முதற்பாதி முடிவில் கோலெண்ணிக்கையை ஜுவென்டஸ் சமப்படுத்தியது.
இரண்டாவது பாதியில் கிறிஸ்டியோ ரொனால்டோ கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையானது கோல் கம்பத்துக்கு சற்று மேலால் சென்றிருந்தது.
இந்நிலையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக மத்தியகளவீரர் மார்கோ பரோலோவிடமிருந்து வந்த பந்தை போட்டியின் 73ஆவது நிமிடத்தில் லேஸியோவின் இன்னொரு மத்தியகளவீரரான செனட் லுலுச் கோலாக்கிய நிலையில் லேஸியோ மீண்டும் முன்னிலை பெற்றது.
பின்னர் போட்டி முடிவடையும் தருணங்களில் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்றதன் மூலம் சிவப்பு அட்டை காட்டப்பெற்று ஜுவென்டஸின் மத்தியகளவீரர் றொட்றிகோ பென்டாக்கூர் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இதற்கு வழங்கப்பட்ட பிறீ கிக்கை மாற்றுவீரராகக் களமிறங்கிய லேஸியோவின் மத்தியகளவீரர் டனிலோ கடல்டி கோலாக்க இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025