2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

இந்தியாவுக்கெதிராக ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து?

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 24 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்று தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், சிரேஷ்ட வீரர்களான அணித்தலைவர் றோஹித் ஷர்மா, விராட் கோலி, மொஹமட் ஷமி மற்றுக் குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஶ்ரீகர் பரத், ரஜாட் பட்டிடார், உம்ரான் மலிக், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

மறுபக்கமாக நியூசிலாந்தைப் பொறுத்த வரையில் ஹென்றி நிக்கொல்ஸ், ஹென்றி ஷிப்லே உள்ளிட்டோருக்குப் பதிலாக மார்க் சப்மன், ஜேக்கப் டஃபி உள்ளிட்டோர் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், உலகக் கிண்ணமானது இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் பின் அலென் போன்றோர் விரைவில் ஓட்டங்களைப் பெற வேண்டியது அவசியமாகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .