2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இந்தியாவை வீழ்த்தி சம்பியனாகிய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் சம்பியனானது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் வென்றே பாகிஸ்தான் சம்பியனானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் சமீர் மின்ஹாஸின் 172 (113), அஹ்மட் ஹுஸைனின் 56 (72), உஸ்மான் கானின் 35 (45) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 348 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அலி ராசா (4), மொஹமட் சயாம் (2), அப்துல் சுபன் (2), ஹுஸைவா அஹ்ஸனிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 26.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களையே பெற்று 191 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியினதும், தொடரினதும் நாயகனாக மின்ஹாஸ் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X