2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா - பாக். ‘சூப்பர் 4’ ஆட்டம்: மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி

Editorial   / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (21)  மோதுகின்றன.

இந்த ஆட்டத்துக்கு மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி கைகுலுக்காத விவகாரத்தில் ஆண்டி பைஃகிராப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது.

அவரை தொடரில் இருந்து நீக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடரில் இருந்து விலகுவோம் என மிரட்டல் விடுத்தது. ஆனால் ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அத்துடன் பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் ஆட்டத்திலும் பைகிராஃப்ட்டே மேட்ச் ரெஃப்ரீயாக செயல்பட்டிருந்தார். இந்த நிலையே இன்றைய ஆட்டத்திலும் தொடரக்கூடும் என தெரிகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X