2025 மே 02, வெள்ளிக்கிழமை

இந்தியக் குழாமில் ஜைஸ்வால்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 19 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமில் யஷஸ்வி ஜைஸ்வால் இடம்பெற்றுள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் ஜைஸ்வால் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.

உபாதைக்குள்ளான ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கெதிரான தொடரில் பும்ராவுக்குப் பதில் ஹர்ஷித் ரானா இடம்பெற்றுள்ளதோடு, மூன்றாவது போட்டியில் தனது உடற்றகுதியை பும்ரா சோதிக்கவுள்ளார்.

ரானா ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெறுவதும் இதுவே முதற்தடவையாகும்.

மொஹமட் சிராஜ் குழாமில் இடம்பெறாத நிலையில் அர்ஷ்டீப் சிங் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, வொஷிங்டன் சுந்தரும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

உப அணித்தலைவராக ஷுப்மன் கில் பெயரிடப்பட்டுள்ளார்.

குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில் (உப அணித்தலைவர்), யஷஸ்வி ஜைஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், றிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, இரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, அர்ஷ்டீப் சிங்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .