2025 ஜூலை 09, புதன்கிழமை

இந்தியக் குழாமுக்குத் திரும்பினார் கார்த்திக்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் விக்கெட் காப்பாளரும் மத்தியவரிசை துடுப்பாட்டவீரருமான தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா இறுதியாக விளையாடிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரில் இடம்பெற்றிருக்காத தினேஷ் கார்த்திக், அத்தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த இளம் விக்கெட்காப்பாளர் றிஷப் பண்டையே தற்போதைய குழாமில் பிரதியீடு செய்கிறார்.

இதேவேளை, காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடர்கள், அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை தவறவிட்டிருந்த சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியா, காயம் குணமடைந்த நிலையில் மீண்டும் குழாமுக்குத் திரும்புகிறார்.

இந்நிலையில், இந்தியா இறுதியாக பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான, அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களுக்கான குழாம்களில் இடம்பெற்றிருக்காத இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோணி, நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர், அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர் குழாம்களில் இடம்பெற்றிருந்த மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர் மனீஷ் பாண்டி, வேகப்பந்துவீச்சாளர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இந்தியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் இருக்கின்றபோதும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக்கான குழாமில் அண்மையில் இடம்பெற்றிருக்காத கேதார் யாதவ், தற்போது அக்குழாமிலும் இடம்பிடித்துள்ளார்.

இதுதவிர, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், சுழற்பந்துவீச்சாளர் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாம் பின்வருமாரு,

ரோகித் ஷர்மா, ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், விராத் கோலி (அணித்தலைவர்), அம்பாதி ராயுடு (ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மாத்திரம்), தினேஷ் கார்த்திக், கேதார் யாதவ், மகேந்திர சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), றிஷப் பண்ட் (இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கு மாத்திரம்), ஹர்டிக் பாண்டியா, குருனால் பாண்டியா (இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கு மாத்திரம்), இரவீந்திர ஜடேஜா (ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மாத்திரம்), புவ்னேஷ்வர் குமார், மொஹமட் ஷமி (ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மாத்திரம்), குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அஹமட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .