Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 24 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்துக்கு 350 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், லீட்ஸில் வெள்ளிக்கிழமை (20) ஆரம்பித்த இப்போட்டியின் நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இந்தியா, லோகேஷ் ராகுலின் 137, றிஷப் பண்டின் 118, இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 25, கருண் நாயரின் 20 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜொஷ் டொங்க், பிறைடன் கார்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷொய் பஷிர் 2, கிறிஸ் வோக்ஸ் மற்றும் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் 371 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் ஸக் குறோலி 12 ஓட்டங்களுடனும், பென் டக்கெட் ஒன்பது ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
45 minute ago
3 hours ago
4 hours ago