Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்றதோடு, மூன்றாவது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், மெல்பேணில் வியாழக்கிழமை (26) ஆரம்பித்த நான்காவது போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா 41 ஓட்டங்களுடன் நேதன் லையனை இழக்க சகல விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 340 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா, அணித்தலைவர் பற் கமின்ஸ் (3), ஸ்கொட் போலண்ட் (3), நேதன் லையன் (2), ட்ரெவிஸ் ஹெட், மிற்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களையே பெற்று 184 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் யஷஸ்வி ஜைஸ்வால் 84, றிஷப் பண்ட் 30 ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக கமின்ஸ் தெரிவானார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago