Shanmugan Murugavel / 2024 ஜூன் 05 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்க விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிறீமியர் லீக்கின் கொல்கத்தா நைட் றைடர்ஸின் ஆலோசகரான கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அணுகியிருந்தபோதும், அவர் மே 27ஆம் திகதி என்ற பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளுக்கு முன்னர் விண்ணப்பித்தாரா என உறுதிப்படுத்தப்படவில்லை.
இன்னுமொரு பதவிக்காலத்தைப் பெற விரும்பவில்லையென தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் தெரிவித்ததாகவும், ட்ராவிட்டைப் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்பட்ட வி.வி.எஸ் லக்ஸ்மனும் தனிப்பட்ட காரணங்களால் பயிற்சியாளர் பதவியை விரும்பவில்லையெனக் கூறப்படுகிறது.
15 minute ago
37 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
37 minute ago
39 minute ago