Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது. கான்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஏபி.டி வில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 ஓட்டங்களையும் ஃபப் டு பிளெஸிஸ் 62 (77), ஹஷிம் அம்லா 37 (59), ‡பர்ஹான் பெஹர்டியன் ஆ.இ 35 (19) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், அமித் மிஷ்ரா, உமேஷ் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 4.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய இரவிச்சந்திரன் அஷ்வின், காயம் காரணமாக மேலதிகமாகப் பந்துவீச முடியாது போனது.
304 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்று, 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட, 5 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டன.
துடுப்பாட்டத்தில் றோகித் ஷர்மா 150 (133), அஜின்கியா ரஹானே 60 (82), மகேந்திரசிங் டோணி 31 (30) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ககிஸோ றபடா, இம்ரான் தாஹிர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, ஏபி.டி.வில்லியர்ஸ் தெரிவானார்.
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago