Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2023 ஜூலை 06 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு இனி அனுமதி வழங்கப் போவதில்லை எனக் கூறிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அந்த நிதியை பாடசாலை ரீதியில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கு செலவு செய்யுமாறும் இலங்கைக் கிரிக்கெட் கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையானது, கிரிக்கெட் சபை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலட்சக் கணக்கில் பணத்தை அநியாயமாக செலவு செய்கின்றது. அந்தப் பணத்தை நாடளாவிய ரீதியில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை விருத்தி செய்ய பரிசீலிக்குமாறு நான் அவர்களிடம் கேட்டுள்ளேன்.
இலங்கை கிரிக்கெட் சபையின் பணத்தைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது அமைச்சர் ரணசிங்கவுக்கு தொடர்ந்து சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த T20 உலகக் கோப்பைக்கு சுமார் 17 அதிகாரிகளை அனுப்புவதற்கான செலவினம் குறித்து தற்போதைய இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்துடன் அமைச்சர் முரண்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .