2025 மே 01, வியாழக்கிழமை

இன்டர் செல்லும் கிம்மிச்?

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 04 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான ஜோஷுவா கிம்மிச்சைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலுக்கெதிராக இன்டர் பலத்த போட்டியாக இருக்குமெனக் கூறப்படுகின்ற நிலையில், 30 வயதான கிம்மிச்சைக் கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலும் ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டுக்கு ஆறு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தை வழங்க இன்டர் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மியூனிச்சுடனான கிம்மிச்சின் ஒப்பந்தம் நடப்பு பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில், புதிய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட அவர் தாமதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .