2025 மே 19, திங்கட்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு – 20 தொடர்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 27 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, பிறிஸ்டோலில் இன்றிரவு இலங்கை நேரப்படி 11 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

ஒய்ன் மோர்கனின் ஓய்வுக்குப் பின்னர் ஜொஸ் பட்லரின் ஆரம்பம் குறிப்பிடத்தக்கதாக அமையாத நிலையில், ஜேஸன் றோயும் அண்மைய காலங்களில் குறிப்பிடத்தக்களவு சோபிக்காத நிலையில் இவையனைத்தையும் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகிறது.

ஜொனி பெயார்ஸ்டோ, அடில் ரஷீட் குழாமுக்குத் திரும்பியிருப்பது இங்கிலாந்துக்கு பலத்தை அளிப்பதுடன் றீஸ் டொப்லி, டேவிட் வில்லி, சாம் கர்ரன் ஆகியோர் கவனிக்கப்பட வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர்.

தென்னாபிரிக்காவைப் பொறுத்த வரையில் டேவிட் மில்லர், குயின்டன் டி கொக், ஹென்றிச் கிளாசென், ஏய்டன் மார்க்ரம், றஸி வான் டர் டுஸன், றீலி றொஸோ என அச்சுறுத்தும் வரிசையாகவும் அதேயளவுக்கு பந்துவீச்சிலும் ககிஸோ றபாடா, அன்றிச் நொர்ட்ஜே, தப்ரையாஸ் ஷம்சி என விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடியவர்களையும் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X