2025 மே 17, சனிக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது உலகக் கிண்ணம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி உலகக் கிண்ணத் தொடரானது
அஹமதாபாத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள நடப்புச் சம்பியன்களான
இங்கிலாந்துக்கும், கடந்த முறை இங்கிலாந்திடம் தோல்வியடைந்த நியூசிலாந்துக்கும்
இடையிலான போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

கிரிக்கெட்டானது இருபதுக்கு – 20 போட்டிகளை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கையில்
கவனிப்பைப் பெறும் இறுதி உலகக் கிண்ணத் தொடராக இந்த 13ஆவது உலகக் கிண்ணம்
அமைந்தால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

இந்தியாவில் இம்முறை உலகக் கிண்ணம் நடைபெறுகின்ற நிலையில் அவ்வணி, இங்கிலாந்து,
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அதிக தடவைகளாக ஐந்து தடவைகள்
உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா உள்ளிட்டவை உலகக் கிண்ணத்தைக்
கைப்பற்றக்கூடிய அணிகளாகக் கருதப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்த வரையில் எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாது களமிறங்குகின்ற
நிலையில் 1996ஆம் ஆண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துமா என்பதே ரசிகர்களில் ஏக்கமாகவுள்ளது.
மற்றும்படி இந்த உலகக் கிண்ணத்தைப் பொறுத்த வரையில் ஷுப்மன் கில், கிளென் மக்ஸ்வெல்,
ட்ரெண்ட் போல்ட், மிற்செல் ஸ்டார்க், பாபர் அஸாம் போன்றோர் பிரகாசிப்பர் எனக்
கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .