Shanmugan Murugavel / 2022 மே 31 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெறவுள்ள காலிறுதிப் போட்டியொன்றில் நடப்புச் சம்பியனான நொவக் ஜோக்கோவிச்சும், உலகின் ஐந்தாம் நிலை வீரரான ரஃபேல் நடாலும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மன்னுடனான நான்காவது சுற்றுப் போட்டியில் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு உலகின் முதல்நிலை வீரரான ஜோக்கோவிச் தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸின்னுடனான தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 3-6, 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்றே ஸ்பெய்னின் நடால் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.
13 தடவைகள் பிரெஞ்சுப் பகிரங்க சம்பியனான நடால், கடந்த முறை அரையிறுதிப் போட்டியில் சேர்பியாவின் ஜோக்கோவிச்சிடம் தோல்வியடைந்திருந்தார்.
15 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago