Shanmugan Murugavel / 2015 நவம்பர் 12 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, பங்களாதேஷ் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இம்ருல் கைஸ் 73 (95), தமிம் இக்பால் 73 (98), மகமதுல்லா 52 (40) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், கிறேம் கிறீமர், லூக் ஜொங்வெ இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய சிம்பாப்வே அணி, ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் 43.3 ஓவர்களின் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில், ஷோன் வில்லியம்ஸ் 64 (84), எல்ற்றன் சிக்கும்புரா 45 (47), மல்கொம் வோலர் 32 (40) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், பங்களாதேஷின் இளம் வீரர் முஸ்தபிஸூர் ரஹ்மான், தனது 3ஆவது ஐந்து விக்கெட் பெறுதியைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக தமிம் இக்பாலும் தொடரின் நாயகனாக முஷ்பிக்கூர் ரஹீமும் தெரிவாகினர்.
அண்மைய வருடங்களில், 'பங்ளாவோஷ்" என பங்களாதேஷ் இரசிகர்களால் அழைக்கப்படும் வெள்ளையடிப்புத் தொடர் வெற்றியை, பங்களாதேஷ் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், சிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கெதிராகப் பெற்றுள்ளது. அத்தோடு, பங்களாதேஷில் இடம்பெற்ற 5 ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களையும் அந்நாடு வெற்றிகொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .