Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, இப்பருவகாலத்தில் தமது 100ஆவது கோலைப் பெற்றது.
ஹட்டர்ஸ்பீல்ட் டெளண் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான பிறீமியர் லீக் போட்டியிலேயே இப்பருவகாலத்தின் தமது 100ஆவது கோலை மன்செஸ்டர் சிற்றி பெற்றது.
இப்போட்டியின் 18ஆவது நிமிடத்தில் டனிலோ பெற்ற கோலுடன் ஆரம்பத்தில் மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து முதற்பாதி முடிவு வரைக்கும் கோலெதுவும் பெறப்படாத நிலையில் முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 54ஆவது நிமிடத்தில், சக வீரர் லெரோய் சனே கொடுத்த பந்தை ரஹீம் ஸ்டேர்லிங் கோலாக்க தமது முன்னிலையை மன்செஸ்டர் சிற்றி இரட்டிப்பாக்கியதோடு, அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சேர்ஜியோ அகுரோ கொடுத்த பந்தை லெரோய் சனே கோலாக்கியதோடு இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
8 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago