2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இரண்டாவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 09 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பேர்மிங்ஹாமில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக குறித்த போட்டி அமைகின்றது.

இங்கிலாந்து அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஒலி றொபின்ஸன் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை கிரேய்க் ஒவெர்ட்டன் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதோடு, ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட்டுக்குப் பதிலாக ஜேக் லீச், ஒலி ஸ்டோன் ஆகியோர் விளையாடும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக மிற்செல் சான்ட்னெர் விளையாட முடியாமல் போயுள்ள நிலையில் அவருக்குப் பதில் அஜாஸ் பட்டேல் விளையாடுவார் என்பது எதிர்பார்க்கப்படுவதோடு, உபாதைக்குள்ளான அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனை வில் யங்க் பிரதியிடுவார் எதிர் எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, வேகப்பந்துவீச்சாளர்கள் டிம் செளதி, கைல் ஜேமிஸன் ஆகியோரை ட்ரெண்ட் போல்ட், மற் ஹென்றி ஆகியோர் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .