Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 02 , பி.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முன்னேறியுள்ளது.
எவெர்ற்றன், போர்ண்மெத் அணிகளுக்கெதிரான போட்டிகளில் வென்றமையைத் தொடர்ந்து முன்னேறிவந்த டொட்டென்ஹாம் ஹொட்ஸ்ட்பர், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸ் அணியிடம் கடந்த சனிக்கிழமை தோல்வியைத் தளுவியிருந்ததன் மூலம் பின்னடைவைச் சந்தித்திருந்தபோதும் கார்டிப் சிற்றி அணியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டியின் ஆரம்பத்தில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் நட்சத்திர முன்கள வீரர் ஹரி கேன், சக வீரர் கெய்ரான் ட்ரிப்பியரிடம் கொடுத்த பந்தை அவர் உதைய அது கார்டிப் சிற்றியின் பின்கள வீரர் சீன் மொரிசனிடம் வந்தபோதும் அவர் உதைய அது ஹரி கேனின் முழங்காலில் பட்டு கோலாக போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில் டொட்டென்ஹாமின் முன்கள வீரரான சண் ஹெயுங் மின், சக வீரர் கிறிஸ்டியன் எரிக்சனிடம் கொடுத்த பந்தை அவர் கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 26ஆவது நிமிடத்தில் ஹரி கேன் கொடுத்த பந்தை சண் ஹெயுங் மின் கோலாக்கியதோடு இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அந்தவகையில், 21 போட்டிகளில் விளையாடியுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 48 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை விட ஒரு புள்ளி குறைவாகப் காணப்படுகின்ற நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றி, தமது 21ஆவது போட்டியில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் காணப்படும் லிவர்பூலை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற புல்ஹாம் அணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணி வென்றது. ஆர்சனல் சார்பாக, கிரனிட் ஸாகா, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, ஆரோன் றம்சி, பியரி எம்ரிக் அபுமெயாங்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். புல்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை அபுபக்கர் கமரா பெற்றிருந்தார்.
அந்தவகையில், குறித்த வெற்றியின் மூலம் 41 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்சனல், புள்ளிகள் பட்டியலில் 43 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்படும் செல்சியை நெருங்கியுள்ளது. இதில், ஆர்சனலை விட செல்சி ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago