2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலையில் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஜமைக்காவில் சனிக்கிழமை (30) ஆரம்பித்த இப்போட்டியின் இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் ஷாமர் ஜோசப் (3), ஜேடன் சியல்ஸ் (4), அல்ஸாரி ஜோசப்பிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷட்மன் இஸ்லாம் 64, அணித்தலைவர் மெஹிடி ஹஸன் மிராஸ் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் 33 ஓட்டங்களுடனும், கேசி கார்ட்டி 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை நஹிட் ரானா கைப்பற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .