2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இரண்டாவது டெஸ்ட் நாளை

Editorial   / 2017 டிசெம்பர் 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, ஹமில்டனில், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30க்கு ஆரம்பிக்கின்றது.

முதலாவது டெஸ்டில் இனிங்ஸ் தோல்வியைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள், இப்போட்டியோடு சேர்த்து இவ்வாண்டு இரண்டு தடவைகள் தாமதமாகப் பந்துவீசியதன் காரணமாக இப்போட்டியில் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டரையும் இழந்துள்ளது. இப்போட்டியில் கிரேய்க் பிறத்வெய்ட் மேற்கிந்திய தீவுகளுக்கு தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம், தனக்கு முதலாவது குழந்தை பிறந்தமை காரணமாக முதலாவது போட்டியைத் தவறவிட்ட நியூசிலாந்தின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி, இரண்டாவது டெஸ்டில் மற் ஹென்றியை பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X