Shanmugan Murugavel / 2016 ஜூலை 06 , மு.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியிலும் எட்டு விக்கெட்டுகளினால் தோல்வியடைந்த இலங்கை, இங்கிலாந்துடனான தொடரில் எந்தவொரு வெற்றியையும் பெறாமல் தோல்வி முகத்துடன் நாடு திரும்புகிறது.
குறித்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணித் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, தனுஷ்க குணதிலக 26 (16), தினேஷ் சந்திமால் 23 (22), குஷால் மென்டிஸ் 21 (16) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இங்கிலாந்து சார்பாக அறிமுகத்தை மேற்கொண்ட லியாம் டாஸன், கிறிஸ் ஜோர்டான் தலா மூன்று விக்கெட்டுகளையும் லியாம் பிளங்கெட் இரண்டு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 141 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 17.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, ஜொஸ் பட்லர் 73 (49), ஒயின் மோர்கன் 47 (39) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக அஞ்செலோ மத்தியூஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக ஜொஸ் பட்லர் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .