2025 ஜனவரி 25, சனிக்கிழமை

இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்ற நியூசிலாந்து, ஹமில்டனில் இன்று(08) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

மழை காரணமாக 37 ஓவர்கள் கொண்டதாக அமைந்த இப்போடியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் சரித் அசலங்க, நியூசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, றஷின் றவீந்திரவின் 79 (63), மார்க் சப்மனின் 62 (52), டரைல் மிற்செல்லின் 38 (38) ஓட் டங்களோடு 37 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில். மகேஷ் தீக்ஷன ஹட்-ட்ரிக் உள்ளடங்கலாக 4, வனிது ஹசரங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 37 ஓவர்களில் 256 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, ஜேக்கப் டஃபி (2), மற் ஹென்றி, நாதன் ஸ்மித், அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், வில்லியம் ஓ ருர்க்கிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 30.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களையே பெற்று 113 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் கமிந்து மென்டிஸ் 64 (66) ஓட்டங்களைப் பெற்றார்.

இப்போட்டியின் நாயகனாக றவீந்திர தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X