Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பெண்கள் அணியுடனான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. விஷ்மி குணரத்ன 39 (43), ஹர்ஷிதா சமரவிக்கிரம 21 (23), ஹசினி பெரேரா 20 (23), அணித்தலைவி சாமரி அத்தப்பத்து 15 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 4-1-20-1, கிரந்தி கோட் 3-0-23-1, ஷ்றீ சரணி 4-0-30-1, வைஷ்ணவி ஷர்மா 4-0-16-0, அருந்ததி ரெட்டி 4-0-23-0, அமஞ்சோட் கெளர் 1-0-8-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 122 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. ஜெமிமா றொட்றிகாஸ் ஆட்டமிழக்காமல் 69 (44), ஸ்மிருதி மந்தனா 25 (25), அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர் ஆட்டமிழக்காமல் 15 (16), ஷெஃபாலி வர்மா 09 (05) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இனோக றணவீர 3.4-0-17-1, காவ்யா கவிந்தி 3-0-20-1, சாமரி 2-0-16-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகியாக றொட்றிகாஸ் தெரிவானார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago