2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு எதிரான ரி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி இந்திய  கிரிக்கெட் சபையிடம் ரோகித் சர்மா ஓய்வு கேட்டுக் கொண்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ரோகித்சர்மா. அவர் இந்த ஆண்டு 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதற்கிடையே அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி இந்திய  கிரிக்கெட் சபையிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் மூன்று இரவு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி 5ஆம் திகதி கவுகாத்தியில் நடக்கிறது.

இந்த தொடர் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று தெரிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் ரோகித்சர்மா தனக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து ஒய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டு ரோகித் சர்மா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடினார்.

சில தொடரில் அணித்தலைவர் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது பொறுப்பு அணித்தலைவர் பதவியையும் ஏற்று அணியை வழி நடத்தினார். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .