2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கைக்கு புதிய தெரிவுக் குழு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணிக்கு புதிய தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இலங்கையின் முன்னாள் வீரர் அசந்த டி மெல் தலைமையிலான தெரிவுக்குழு இன்னொரு மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

புதிய தெரிவுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல்லே தொடரவுள்ள நிலையில், அவருடன் இலங்கையின் இன்னொரு முன்னாள் வீரரான விநோதன் ஜோன் இணைந்து கொள்கின்றார்.

இதேவேளை, தெரிவுக் குழுவுக்கு கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் வீரரான சமிந்த மென்டிஸ் தெரிவுக்குழுவில் தொடருகின்ற நிலையில், முன்னைய தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கையணியின் முன்னாள் வீரர்களான பிரண்டன் குருப்பு, ஹெமந்த விக்ரமரத்ன ஆகியோர் தெரிவுக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னைய தெரிவுக்குழுவானது, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண சுற்றுப்பயணங்களுக்கானதும், சொந்த மண்ணில் பங்களாதேஷுக்கெதிராக இடம்பெற்ற தொடருக்கான இலங்கைக் குழாமையும் தெரிவுசெய்திருந்தது.

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவின் பதவிக்காலமானது கடந்த திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பித்து ஓராண்டுக்கு நீடிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .