Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் தற்போது நடைபெற்றுவரும் இந்தியாவுக்கெதிரான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை 174 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்திலேயே லோகேஷ் ராகுலை மகேஷ் தீக்ஷனவிடம் இழந்தது. அடுத்த ஓவரிலேயே விராட் கோலியையும் டில்ஷான் மதுஷங்கவிடம் இந்தியா இழந்தது.
இந்நிலையில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, 72 (41) ஓட்டங்களுடன் சாமிக கருணாரத்னவிடம் வீழ்ந்திருந்தார். தொடர்ந்து சூரியகுமார் யாதவ்வும் 34 (29) ஓட்டங்களுடன் ஷானகவிடம் வீழ்ந்தார்.
சிறிது நேரத்தில் ஹர்டிக் பாண்டியாவும் ஷானகவிடம் வீழ்ந்ததோடு, தீபக் ஹூடா, றிஷப் பண்ட் ஆகியோர் மதுஷங்கவிடம் அடுத்த ஓவரில் வீழ்ந்தனர். இறுதி ஓவரில் புவ்னேஷ்வர் குமாரும் கருணாரத்னவிடம் வீழ்ந்த நிலையில், இரவிச்சந்திரன் அஷ்வினின் ஆட்டமிழக்காத 15 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை இந்தியா பெற்றது.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago