Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 10 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிராக துடுப்பாட்டப் பக்கத்தில் புதிய முகத்துடன் அவுஸ்திரேலியா களமிறங்குகிறது.
இலங்கையணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 13 பேர் கொண்ட அவுஸ்திரேலியக் குழாம் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட குழாமில் 20 வயதான துடுப்பாட்டவீரர் வில் புகோவ்ஸ்கி இடம்பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியக் குழாமொன்றில் வில் புகோவ்ஸ்கி இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகுமென்ற நிலையில், இவருக்கு மேலதிகமாக ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் ஜோ பேர்ண்ஸ், மற் றென்ஷோ ஆகியோரும் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் இப்பருவகால முதற்தரப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களில் ஐந்தாமிடத்தில் பேர்ண்ஸ் இருக்கின்றபோதும் இப்பருவகாலத்தில் மோசமான பெறுபேற்றையே மற் றென்ஷோ கொண்டிருக்கிறார்.
இதேவேளை, இந்திய அணிக்கெதிரான தொடரின்போது அழுத்தத்துக்குள்ளாகிய மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ், நேதன் லையன் ஆகியோரை உள்ளடக்கிய பந்துவீச்சுவரிசையே எதிர்பார்க்கப்பட்டது போலவே தற்போதைய குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஷோன் மார்ஷ், மிற்செல் மார்ஷ், ஆரோன் பின்ஞ், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் ஆகியோர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: டிம் பெய்ன் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), ஜொஷ் ஹேசில்வூட் (உப அணித்தலைவர்), ஜோ பேர்ண்ஸ், பற் கமின்ஸ், மார்க்கஸ் ஹரிஸ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மர்னுஸ் லபுஷைன், நேதன் லையன், வில் புகோவ்ஸ்கி, மற் றென்ஷோ, மிற்செல் ஸ்டார்க், பீற்றர் சிடில்.
இதேவேளை, இத்தொடருக்கான இலங்கைக் குழாம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துடுப்பாட்டவீரர் குசல் பெரேரா மீண்டும் குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கெதிரான தொடரில் மோசமாகச் செயற்பட்டிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தனுஷ்க குணதிலக குழாமிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அந்தவகையில், திமுத் கருணாரத்னவுடன் சதீர சமரவிக்கிரம அல்லது லஹிரு திரிமான்ன ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழாம்: தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன (உப அணித்தலைவர்), லஹிரு திரிமான்ன, சதீர சமரவிக்கிரம, தனஞ்சய டி சில்வா, றொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), குசல் பெரேரா, டில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகான், சுரங்க லக்மால், நுவான் பிரதீப், லஹிரு குமார, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
21 minute ago