Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பல்லேகலவில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையையடுத்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றுவதை உறுதி செய்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஹரி ப்றூக் இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பவன் ரத்னாயக்கவின் 40 (22), கமில் மிஷாரவின் 36 (30), பதும் நிஸங்கவின் 34 (22), குசல் மென்டிஸின் 32 (17), சரித் அசலங்கவின் ஆட்டமிழக்காத 28 (22) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் வில் ஜக்ஸ் 4-0-24-1, அடில் ரஷீட் 4-0-25-1, லியம் டோஸன் 4-0-32-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 190 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது.
இந்நிலையில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 17 ஓவர்களில் 168 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், டொம் பன்டனின் ஆட்டமிழக்காத 54 (33), ஜொஸ் பட்லரின் 39 (29), ப்றூக்கின் 36 (12), சாம் கர்ரனின் ஆட்டமிழக்காத 20 (14) ஓட்டங்களோடு 16.4 ஓவர்களில் வெற்றியிலக்கை இங்கிலாந்து அடைந்தது. பந்துவீச்சில் அணித்தலைவர் தசுன் ஷானக 3-0-24-1, எஷான் மலிங்க 1.2-0-6-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக பன்டன் தெரிவானார்.
8 hours ago
8 hours ago
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
05 Feb 2026