Editorial / 2018 நவம்பர் 21 , மு.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்கெதிரான 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கைக் குழாமில், இளம் சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருபத்தொரு (21) வயதான நிஷான் பீரிஸ், ஓஃப் ஸ்பின் வீசும் வீரராவார்.
இங்கிலாந்துக்கெதிரான முதலிரு போட்டிகளிலும் விளையாடியிருந்த சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய, அவரது பந்துவீச்சுப் பாணி குறித்து எழுந்துள்ள சந்தேகத்தைத் தொடர்ந்து, அதைப் பரீட்சிப்பதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலேயே, அவருக்குப் பதிலாக, நிஷான் பீரிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .