Shanmugan Murugavel / 2026 மார்ச் 03 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுதற்கு சனத் ஜெயசூரிய தீர்மானித்துள்ளார். பாகிஸ்தானுக்கெதிரான இலங்கையின் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றுப் போட்டிக்கு பின்னரே தனது முடிவை ஜெயசூரிய அறிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக இந்த முடிவை ஜெயசூரிய அறிவிக்காதபோதும், இந்த உலகக் கிண்ணமே தனது இறுதித் தொடரென ஏற்கெனவே தான் தீர்மானித்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த 2024 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்தே இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூரிய பதவியேற்றிருந்தார். ஜெயசூரியவின் கீழ் 27 ஆண்டுகளின் பின்னர் இந்தியாவுக்கெதிரான தமது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை வென்றதுடன், இங்கிலாந்தில் டெஸ்டொன்றை வென்றதுடன், நியூசிலாந்துக்கெதிராகவும் 2-0 என டெஸ்ட் தொடரொன்றில் வென்றிருந்தது.
13 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
44 minute ago