2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

’’இலங்கை அரையிறுதியை மறக்க வேண்டும்’’: முரளி

Editorial   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத்தில் எஞ்சிய போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதை மறந்துவிட்டு, எங்களது பாணியில் விளையாட வேண்டும் என்றும், அரையிறுதிக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்   தெரிவித்துள்ளார். .

புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு மேலே உள்ள அணிகள் அதிக நிகர புள்ளி விகிதத்தை பேணுவதாகவும், அரையிறுதிக்கு செல்ல மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என்றும்  முரளிதரன் கூறினார்.

உலக சாம்பியன் அணியை ஓரிரு நாட்களில் உருவாக்க முடியாது, அதற்கு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் போன்ற நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், விளையாட்டு வீரர்களுக்கு கால அவகாசம் வழங்குவது இன்றியமையாத அம்சம் என்றும் முரளிதரன் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு வீரர் தோல்வியடைந்தார் என்பதற்காக அணியில் இருந்து நீக்கப்படக் கூடாது எனவும், 2003 உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்து அணியில் இருந்து மஹேல ஜயவர்தன நீக்கப்பட்டிருந்தால், மஹேல போன்ற ஒரு ஜாம்பவான் இலங்கைக்கு இன்று கிடைத்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அவிஷ்க பெர்னாண்டோ கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றியதாகவும், இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை எனவும் தெரிவித்த முரளிதரன், 1988ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட்டை ஆரம்பித்த சனத் ஜயசூரிய மற்றும் ரொமேஷ் களுவிதாரண ஆகியோர் பலம் வாய்ந்த வீரர்களாக மாறியதாகவும் குறிப்பிட்டார்.  

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் யுனிசெப் குழந்தைகளுக்காக செயல்படுத்தும் சிறப்புத் திட்டத்தின் பிரதிநிதியான, உலக டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன். புனே கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு விஜயம் செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .