Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது நாளை மறுதினம் ஆரம்பிக்கிறது.
கெளகாத்தியில் நாளை மறுதினம் இரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுடனேயே மேற்படி தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்திலுள்ள பாகிஸ்தானை, அதன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என ஏழாமிடத்திலிருக்கும் இலங்கை வெள்ளையடித்திருந்தபோதும், தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள அவுஸ்திரேலியாவுடனான அந்நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-3 என வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், தரவரிசையில் ஐந்தாமிடத்தில் காணப்படும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சவால் விடுப்பதற்கு துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியத் தொடரை விட பாரியளவு முன்னேற்றத்தை இலங்கை காண்பிக்க வேண்டுமென்பதுடன், பந்துவீச்சிலும் அணித்தலைவர் லசித் மலிங்க தவிர்ந்த ஏனையோரும் மேம்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளனர்.
இலங்கையணியில் குறிப்பிடத்தக்களவு காலமாகக் காணப்படும் குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ் ஆகியோர் புதுவரவுகளான அவிஷ்க பெர்ணான்டோ, பானுக ராஜபக்ஷ, ஒஷாட பெர்ணான்டோவுடன் இணைந்து தொடர்ச்சியான சீரான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளனர்.
இந்நிலையில், பந்துவீச்சுப் பக்கத்தில் லசித் மலிங்க, இசுரு உதான, வனிடு ஹசரங்கவுடன் இணைந்து லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் மேம்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்தி இந்திய அணியின் துடுப்பாட்டவரிசையின் விக்கெட்டுகளைத் தொடராகத் தகர்த்தாலே இலங்கை வெற்றிபெற முடியும்.
மறுபக்கமாக இந்திய அணியைப் பொறுத்தவரையில் இத்தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளபோதும் பலமானதாகவே அவ்வணி காணப்படுகிறது. தவிர, காயத்திலிருந்து குணமடைந்த ஜஸ்பிரிட் பும்ராவின் மீள்வருகை இந்தியாவுக்கு மேலும் பலம் சேர்ப்பதாய் உள்ளது.
அண்மைய காலங்களில் லோகேஷ் ராகுல் சிறப்பாகச் செயற்பட்டுள்ள நிலையில், தனதிடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வேகமான குறிப்பிடத்தக்களவு ஓட்டங்களையுடைய ஆரம்பங்களை வழங்க வேண்டிய அழுத்தத்தில் ஷிகர் தவான் காணப்படுகிறார்.
இத்தொடரில் 3-0 என இந்தியாவால் இலங்கை வெள்ளையடிக்கப்பட்டால் எட்டாமிடத்துக்கு கீழிறங்குவது தவிர இத்தொடரின் வேறெந்த முடிவும் தரவரிசை நிலைகளை மாற்றாது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago