2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இலங்கையை வென்று நியூசிலாந்துக்கு 4-0 வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்குமிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது போட்டியில் லிங்கொல்னில் இடம்பெற்ற போது, 172 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. மழை காரணமாக, 45 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது இடம்பெற்றிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த நியூசிலாந்து ஏ அணி, மிற்சல் சான்டரின் ஆட்டமிழக்காத 70 (43), மைக்கல் பிரேஸ்வெல்லின் 53 (64), ஜோர்ஜ் வேர்க்கரின் 47 (48), ஹென்றி நிக்கல்ஸின் 44 (51) ஓட்டங்களின் துணையோடு, 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில், கசுன் ரஜித்த, லஹிரு மதுஷங்க இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

300 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 25.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 172 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் தனுஷ்க குணதிலக 39 (27), அஷன் பிரியஞ்சன் 25 (24) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், நீல் வக்னர், மத்தியூ குய்ன், ஜேகப் டபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .