Administrator / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இதேவேளை, இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் மற்றும் உப தலைவர் லஹிரு திரிமான்னவுக்கு, போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு இடைநிறுத்தப் புள்ளிகளை பெற்ற இஷாந்த், மொஹாலியில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும், ஓர் இடைநிறுத்த புள்ளியைப் பெற்றுள்ள சந்திமால், இலங்கையில் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலும் பங்குபெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
3ஆவது போட்டியில் இஷாந்த் ஷர்மா துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, பந்துவீசிக் கொண்டிருந்த தம்மிக்க பிரசாத் உட்பட இலங்கை வீரர்களுக்கும் அவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினைத் தொடர்ந்து, அவருடன் உடல் தொடுகையை சந்திமால் ஏற்படுத்தியிருந்தார்.
இதன் பின்னர், போட்டியின் இறுதி இனிங்ஸில், இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரங்கவை ஆட்டமிழக்கச் செய்த பின், அவரை நோக்கி ஆக்ரோஷமான செய்கைகளையும் வார்த்தைகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போதும் திரிமான்ன, சந்திமால் ஆட்டமிழந்த போது இவ்வாறு செயற்பட்டமைக்கு, இஷாந்த் ஷர்மாவின் போட்டி ஊதியத்தின் 65 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது.
அடுத்த 12 மாதங்களில் மீண்டுமொரு முறை இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால், ஆகக்கூடுதலாக ஒரு வருடம் வரையான வரக்கூடியளவுக்கு, குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கு போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .