Shanmugan Murugavel / 2026 மார்ச் 09 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் அதிகபட்சமாக இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இதில் பும்ரா 8 போட்டிகளில் ஒரு ஓவருக்கு 6.21 ஓட்டங்கள் என்ற ரீதியிலேயே ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்த நிலையில், வருண் 9 போட்டிகளில் ஓவரொன்றுக்கு 9.25 ஓட்டங்கள் என்ற வகையில் விட்டுக் கொடுத்திருந்தார்.
இதேவேளை 4 போட்டிகளில் ஓவருக்கு 6.8 ஓட்டங்களையே வழங்கியிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஷட்லி வன் ஸ்கல்குவாக், 6 போட்டிகளில் ஓவருக்கு 7.76 ஓட்டங்களை வழங்கியிருந்த சிம்பாப்வேயின் பிளெஸிங்க் முஸர்பனி, 8 போட்டிகளில் ஓவருக்கு 8.15 ஓட்டங்களை இங்கிலாந்தின் அடில் ரஷீட் ஆகியோர் தலா 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இரண்டாமிடத்திலுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் லுங்கி என்கிடி 7 போட்டிகளில் ஓவருக்கு 7.19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தும், நியூசிலாந்தின் றஷின் றவீந்திர 9 போட்டிகளில் விளையாடி 7 இனிங்ஸ்களில் ஓவருக்கு 7.84 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாமிடத்திலுள்ளனர்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026