2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: இலங்கைக்கு வெற்றியிலக்கு 147 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி பெறுவதற்கு 147 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, டுனித் வெல்லலாகே (3), மகேஷ் தீக்‌ஷன (2), துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்கவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பில் ஸோல்ட் 62 (40), வில் ஜக்ஸ் 21 (14), ஹரி ப்றூக் 14 (07), ஜேமி ஒவெர்ட்டன் ஆட்டமிழக்காமல் 10 (10) ஓட்டங்களைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X