Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 8 சுற்றுக்கு இறுதி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
குழு ஏயில் ஏற்கெனவே நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்காவை வென்றிருந்த பாகிஸ்தான், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் முடிவுக்கு நமீபியாவுக்கெதிரான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே சுப்பர் – 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், சஹிப்ஸடா பர்ஹானின் ஆட்டமிழக்காத 100 (58), அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் 38 (23), ஷடாப் கானின் ஆட்டமிழக்காத 36 (22) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் 3-0-25-1, பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ் 4-0-33-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 200 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நமீபியா, சல்மான் மிர்ஸா, மொஹமட் நவாஸ், ஷடாப் கான் (3), உஸ்மான் தாரிக்கிடம் (4) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று 102 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக பர்ஹான் தெரிவானார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago