Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 30 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து லியனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி வெளியேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் அத்லாண்டாவில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து ஐக்கிய அமெரிக்க கழகமான மியாமி வெளியேறியது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக ஜோவா நேவிஸ் இரண்டு கோல்களையும், அஷ்ரஃப் ஹக்கிமி ஒரு கோலையும் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை புளோரிடாவில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான பிளமெங்கோவுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர்ண் மியூனிச் தகுதி பெற்றது.
மியூனிச் சார்பாக ஹரி கேன் இரண்டு கோல்களையும், லியோன் கொரெட்ஸ்கா ஒரு கோலையும் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. பிளமெங்கோ சார்பாக ஜெர்சன், ஜோர்ஜினியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .