2025 மே 17, சனிக்கிழமை

உலகக் கிண்ணத்தில் இலங்கை

Freelancer   / 2023 ஜூலை 03 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

புலவாயோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிம்பாப்வேயுடனான சுப்பர் சிக்ஸ் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே உலகக் கிண்ணத்துக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே, டில்ஷான் மதுஷங்க (3), அணித்தலைவர் தசுன் ஷானக, மகேஷ் தீக்‌ஷன (4), மதீஷ பத்திரணவிடம் (2) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 32.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷோன் வில்லியம்ஸ் 56 (57) ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காத 101 (102) ஓட்டங்களோடு 33.1 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக மகேஷ் தீக்‌ஷன தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .