Shanmugan Murugavel / 2026 ஜனவரி 27 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பது குறித்த முடிவை வெள்ளிக்கிழமை (30) அல்லது திங்கட்கிழமைக்கு (02) தாமதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முற்று முழுதாக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தை புறக்கணிப்பு என்ற ஒரேயொரு தெரிவு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கெதிரான போட்டியைப் புறக்கணிப்பது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவனம் செலுத்துவதாக தெரியவருகிறது.
பாகிஸ்தானின் புறக்கணிப்பு முடிவால் அதன் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படாததோடு, சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்கள் மற்றும் ஆசிய கிரிக்கெட் சபையின் தொடர்களில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்தியாவில் போட்டிகளை விளையாட மாட்டோம் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையிலேயே இலங்கையில் அதன் போட்டிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
9 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago