Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபைக்கு மதிப்பளிக்கும் முகமாக எந்தவொரு ஒப்பந்தத்திலும் தான் கைச்சாத்திடவில்லை என நாளை மறுதினம் ஆரம்பமாகும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ள தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் மோர்னி மோர்கல் கூறியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த மோர்னி மோர்கல், ஓய்வு பெற எடுத்த முடிவு குடும்ப முடிவெனவும் தான் இளம் குடும்பமொன்றைக் கொண்டிருப்பதாகவும் வெளிநாட்டு மனைவியொருவரைக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, தான் இன்னும் மனதளவிலும் உடலளவிலும் சிறப்பாக உணர்வதாகவும் உலகிலுள்ள வேறு லீக்குகளில் விளையாடுவேன் என மோர்னி மோர்கல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கடந்தாண்டு தென்னாபிரிக்கா இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது முதல் இங்கிலாந்தின் சில கவுண்டி அணிகளுடன் கொல்பக் ஒப்பந்தத்தில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இறுதியாக, இந்தியாவுக்கெதிரான தொடரின்போதும் 33 வயதான மோர்கல் கவுண்டிகளுடன் கொல்பக் ஒப்பந்தத்தில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கவுண்டி அணிகளில் கொல்பக் ஒப்பந்தத்தில் இணையும் முடிவை மோர்னி மோர்கல் எடுத்தால், யோர்க்ஷையர், சரே அணிகள் அவரை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வாமியிருப்பதாகக் கூறப்படுகிறது.
83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்னி மோர்கல், 294 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 117 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 188 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 44 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 47 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago