Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 08:36 - 1 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், வைரிக் கழகங்களான றியல் மட்ரிட், பார்சிலோனாவுக்கிடையேயான எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை றியல் மட்ரிட் வீழ்த்தியது.
றியல் மட்ரிட் சார்பாக, வின்ஷியஸ் ஜூனியர், மரியானோ டயஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒசசுனாவை செவில்லா வென்றது. செவில்லா சார்பாக, யூசெஃப் என்-நெஸ்யிரி இரண்டு கோல்களையும், லூகாஸ் ஒகம்பொஸ் ஒரு கோலையும் பெற்றிருந்தனர். ஒசசுனா சார்பாக, அரிடனே ஹெர்ணான்டஸ் உம்பியரஸ், றொபேர்ட்டோ டொரஸ் மொராலஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், அஸ்பன்யோலின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை அத்லெட்டிகோ மட்ரிட் முடித்திருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாவுல் நிகூஸ் பெற்றிருந்ததோடு, அஸ்பன்யோலுக்கு ஓவ்ண் கோல் மூலமாக கோல் கிடைக்கப்பெற்றிருந்தது.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு றியல் மட்ரிட் முன்னேறியுள்ளது. 56 புள்ளிகளுடன் முதலிடத்தில் றியல் மட்ரிட்டும், 55 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பார்சிலோனாவும், 46 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றன. நான்காமிடத்தில் 45 புள்ளிகளுடன் கெட்டாபே காணப்படுகிறது.
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026
titus Friday, 06 March 2020 09:54 AM
good
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
27 Jan 2026
27 Jan 2026