Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நடைபெற்ற கண்டி டஸ்கர்ஸுடனான போட்டியில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம், கட்டுக்கோப்பாக பந்துவீசிய அசேல குணரட்ணவிடம் 2 மற்றும் நவீன்-உல்-ஹக்கிடம் 3, நுவான் பிரதீப்பிடம் ஒரு விக்கெட்டை அவ்வப்போது இழந்தது.
எனினும், ஏனையோர் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தபோதும் முறையே 68 (28), 61 (38) ஓட்டங்களைப் பெற்ற அணித்தலைவர் திஸர பெரேரா, தனஞ்சய டி சில்வாவின் இணைப்பாட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை யாழ்ப்பாணம் பெற்றது. கண்டி சார்பாக 3 ஓவர்களில் 14 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து கட்டுக்கோப்பாக முனாப் பட்டேல் பந்துவீசியிருந்தார்.
பதிலுக்கு, 186 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கண்டி சார்பாக, பிரண்டன் டெய்லர் 46 (32), அசேல குணரட்ண 31 (24), குசல் மென்டிஸ் 20 (09) ஓட்டங்களைப் பெற்றதுடன் ஏனையோர் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர்.
உஸ்மான் ஷின்வாரி 3, சுரங்க லக்மால், திஸர பெரேரா, வனிடு ஹஸரங்க ஆகியோர் தலா 2, டுவன்னே ஒலிவியர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையில் 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 131 ஓட்டங்களையே பெற்ற கண்டி 54 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக திஸர பெரேரா தெரிவாகியிருந்தார்.
54 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago
8 hours ago