Shanmugan Murugavel / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரில் பி-லவ் கண்டி சம்பியனானது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள ஓறாவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே கண்டி முதற் தடவையாக சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஓறாவின் அணித்தலைவர் குசல் மென்டிஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓறா, தனஞ்சய டி சில்வாவின் 40 (29), சதீர சமரவிக்கிரமவின் 36 (30), குசல் பெரேராவின் ஆட்டமிழக்காத 31 (25) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், சத்துரங்க டி சில்வா 4-0-25-2, நுவான் பிரதீப் 4-0-30-1, பதிலணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் 2-0-11-0, முஜீப் உர் ரஹ்மான் 4-0-24-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 148 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கண்டி, கமிந்து மென்டிஸின் 44 (37), மொஹமட் ஹரிஸின் 26 (22), மத்தியூஸின் ஆட்டமிழக்காத 25 (21), தினேஷ் சந்திமாலின் 24 (22), ஆசிஃப் அலியின் 19 (10) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், நூர் அஹ்மட் 4-0-27-3, பினுர பெர்ணாண்டோ 4-0-31-2, தனஞ்சய டி சில்வா 3-0-16-0, துஷான் ஹேமந்த 3-0-21-0, பிரமோத் மதுஷன் 2.5-0-20-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக மத்தியூஸும், தொடரின் நாயகனாக வனிடு ஹஸரங்கவும் தெரிவாகினர்.
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026