Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனான நிலையில் இதை முன்னின்று நடத்திய தூண்களிலொருவராக அவ்வணியின் தலைவர் திஸர பெரேரா காணப்படுகின்றார்.
இத்தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய திஸர பெரேரா, 100 பந்துகளுக்கு 223.07 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 261 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஏறத்தாழ ஒவ்வொரு தடவையையும் தனது அதிரடியில் இனிங்ஸின் இறுதிப் பகுதியில் உயர்த்தியிருந்தார்.
தவிர, ஓவருக்கு 7.63 ஓட்டங்கள் என்ற வகையிலேயே ஓட்டங்களை வழங்கியிருந்த திஸர பெரேரா ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
இதேவேளை, தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்திய திஸர பெரேரா, வனிடு ஹஸரங்கவை பயன்படுத்திய விதம் அபாரமானது.
தவிர, விஜயகாந்த் வியாஸ்காந்த் போன்ற இளம்வீரருக்கு சிறப்பான ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தார்.
1 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago