2025 ஜூலை 03, வியாழக்கிழமை

எவெர்ற்றனை வென்றது ஆர்சனல்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் ஆர்சனல் வென்றது.

இப்போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே, எவெற்றனின் மத்தியகளவீரரான ஜைல்பி சிகோர்ட்ஸன் செலுத்திய பிறீ கிக்கானது ஆர்சனலின் பின்களவீரர் டேவிட் லூயிஸிடம் பட்டு வர, அதைக் கோலாக்கிய எவெர்ற்றனின் முன்களவீரர் டொமினிக் கல்வேர்ட்-லூயின் ஆரம்பத்திலேயே தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

எவ்வாறெனினும், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக மத்தியகளவீரரான புகாயோ சாகாவிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய ஆர்சனலின் முன்களவீரரான எடி நிக்கட்டியா கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இந்நிலையில், அடுத்த ஆறாவது நிமிடத்தில் டேவிட் லூயிஸிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய ஆர்சனலின் அணித்தலைவரும் முன்களவீரருமான பியர்-எம்ரிக் உபமெயாங்க், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

எனினும், முதற்பாதி முடிவில் எவெர்ற்றனின் றிஷல்ஸன் பெற்ற கோல் காரணமாக கோலெண்ணிக்கையை எவெர்ற்றன் சமப்படுத்தியது.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் முதலாவது நிமிடத்தில் சக முன்களவீரர் நிக்கொலஸ் பெப்பேயிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய பியர்-எம்ரிக் உபமெயாங்க் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இதன் பின்னர் டொமினின் கல்வேர்ட்-லூயின், றிஷல்ஸனின் கோல் கம்பத்தை நோக்கிய உதைகளை அபாரமாக ஆர்சனலின் கோல் காப்பாளர் பேர்ணார்ட் லெனோ தடுத்திருந்தார்.

இதேவேளை, எடி நிகெட்டியாவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையொன்றானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இறுதியில், டொமினிக் கல்வேர் லூயினால் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டப்பட்ட பந்தானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்த நிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற வட்பேர்ட்டுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, ப்ரூனோ பெர்ணான்டஸ், அன்டோனி மார்ஷியல், மேஸன் கிறீன்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .