Shanmugan Murugavel / 2021 மார்ச் 17 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில், ஐந்தாமிடத்துக்கு, இந்தியணியின் தலைவர் விராத் கோலி முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான தொடரின் முதல் மூன்று போட்டிகளில், 150 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை விராத் கோலி அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 258 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் ஷே ஹோப், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில், 13ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .