Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022ஆ ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ள நிலையில் இரு அணிகள் வருகையால் பிசிசிஐ அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கோடியில் வருமானம் கிடைக்க உள்ளது.
ஐபிஎல் டி20 தொடர் 14 ஆவது ஆண்டாக நடந்து வருகிறது. தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு 10 அணிகளாக உயர்த்தப்பட உள்ளன.
இதற்காக குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமமும், மற்றொரு நிறுவனமும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய அணிக்கான விண்ணப்பத்துக்கு மட்டும் எந்த நிறுவனம் விண்ணப்பித்தாலும் ரூ.75 கோடி முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் கூடுதலாக 2 அணிகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான விருப்ப மனு தாக்கல் செய்யும்போது ரூ.75 கோடி செலுத்த வேண்டும். இரு அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.1,700 கோடி முதலில் நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணிகள் புதிதாக வருவதன் மூலம் பிசிசிஐ அமைப்புக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இந்த இரு அணிகளை வாங்கவும் ஏராளமான புதிய நிறுவனங்கள் விருப்பமாக உள்ளன. எதிர்பார்ப்பின்படி ரூ.5 ஆயிரம் கோடி உறுதியாகக் கிடைக்கும்.
4 minute ago
18 minute ago
30 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
18 minute ago
30 minute ago
32 minute ago