2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஐ.பி.எல்லிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 03 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) சென்னை சுப்பர் கிங்ஸின் சகலதுறைவீரரான ஷேன் வொற்சன் ஓய்வுபெற்றுள்ளார்.

இவ்வாண்டு ஐ.பி.எல்லில் சென்னையின் இறுதிப் போட்டியான கிங்ஸ் லெவிண் பஞ்சாப்புக்கெதிரான போட்டியின் பின்னர் சக அணி வீரர்களுக்கும், அணிக்கும் தனது முடிவை வொற்சன் அறிவித்ததாக சென்னை முகாமைத்துவம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் றோயல்ஸுடனும், 2018ஆம் ஆண்டு சென்னையுடனும் ஐ.பி.எல்லில் சம்பியனாகியிருந்த வொற்சன், 2008, 2013ஆம் ஆண்டு தொடரின் நாயகனாகியிருந்தார்.

இதேவேளை, றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்காகவும் விளையாடியிருந்த வொற்சன், 100 பந்துகளுக்கு 137.91 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 145 போட்டிகளில் 3,874 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், ஹட்-ட்ரிக்கொன்றுடன் 92 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .